மேலும் செய்திகள்
ரங்கப்பனுார் ஊராட்சியில் துணை தலைவர் தேர்வு
26-Jul-2025
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி நிதி ரூ.2 கோடியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக முன்னாள் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர், முன்னாள் ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரைக்குடி அருகே உள்ளது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு 2020 மே முதல் 2022 டிசம்பர் வரை மரம் வெட்டுதல், மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்தல், சாலையின் இருபுறங்களிலும் உள்ள தாவரங்களை அகற்றுவது, சாலை பழுதுபார்க்கும் பணி, குப்பை அகற்ற டிராக்டர் வாடகை, துடைப்பம் வாங்குதல், நிர்வாகச் செலவு, கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு ஆயத்த பணிகள், கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் செய்ததாக போலி ஆவணங்களை தயாரித்து சங்கராபுரம் கிராம ஊராட்சி நிதி ரூ.2 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 207ஐ முறைகேடாக பயன்படுத்தியதாக லஞ்ச சிவகங்கை ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் விசாரணை நடத்தினர். பணம் முறைகேடாக பயன்படுத்தியது உண்மை என தெரிந்தது. அப்போது சங்கராபுரம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த பாண்டியராஜன் 34, 6வது வார்டு உறுப்பினர் நல்லம்மாள் செல்வராணி 39, முன்னாள் ஊராட்சி செயலர் அண்ணாமலை 37, முன்னாள் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா 57, கேசவன் 63 ,ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அண்ணாமலை தற்போது திருப்புத்துார் ஒன்றியம் மணமேல் பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரிகிறார். ஹேமலதா தற்போது பதவி உயர்வில் புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநராக (தணிக்கை) உள்ளார். கேசவன் பணி ஓய்வு பெற்று விட்டார்.
26-Jul-2025