உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை     

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை     

சிவகங்கை, அக்.1- சிவகங்கை மாவட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற அக்., 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை, மருத்துவ செலவிற்கு ரூ.500 என ரூ.4000 வழங்கப்படுகிறது. இது தவிர அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வசதியும் செய்யப்படுகிறது. இவர்களது மறைவுக்கு பின், வாரிசுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். இது வரை இத்திட்டத்தில் 1,334 தமிழறிஞர்கள் பயன் அடைந்துள்ளனர். இது வரை உதவித்தொகை பெறாத தமிழறிஞர்களுக்கு (2024-2025 ) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது 58 முடிந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரம் மட்டுமே. தமிழ் பணி ஆற்றியதற்கான விபரம், பரிந்துரை சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாரிசுதாரரின் ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பத்தை உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை, கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் அக்., 31 க்குள் சமர்பிக்க வேண்டும், என்றார். ////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை