மேலும் செய்திகள்
விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு
27-Sep-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி., அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைத்திருவிழா நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் 'பசுமையும் பாரம் பரியமும்' என்ற தலைப்பில் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் பாரதி தாசன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் லட்சுமிதேவி முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி துவக்கி வைத்தார். விழாவில் நடந்த 47 போட்டிகளில் 13 அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
27-Sep-2025