பள்ளி வாகனங்கள் ஆய்வு
சிவகங்கை: சிவகங்கையில் 220 பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில்பள்ளிகள் சார்பில் மாணவர்களை அழைத்து செல்லும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களின் புதுப்பிப்பு லைசென்ஸ், அபாய வழி, தீயணைப்பு கருவி, ஜி.பி.எஸ்., கருவியுடன் கேமரா, குழந்தைகள் செல்வதற்கான படிகளின் தரம் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். நேற்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, சிங்கம்புணரி பகுதியில் உள்ள பள்ளிகளுக்காக ஓடும் 220 பஸ்கள், வேன்களைஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர். போக்குவரத்து விதிப்படி ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்தனர். ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன், சிவகங்கை டி.எஸ்.பி., அமலஅட்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காரைக்குடியில் தேவகோட்டை, காரைக்குடி பள்ளி வாகனங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.