உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்வர் கோப்பை சிலம்பம் மாநில போட்டிக்கு தேர்வு

முதல்வர் கோப்பை சிலம்பம் மாநில போட்டிக்கு தேர்வு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கோப்பை சிலம்ப போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி முதல் இடத்தை பிடித்தது. கல்லூரிகளுக்கான 55 லிருந்து 65 கி எடை பிரிவில் சிவா முதல் இடத்தையும்,40 லிருந்து 50 கிலோ பெண்கள் எடை பிரிவில் தாட்சாயிணி 3ம் இடத்தையும். பள்ளிக்கூட ஆண்கள் பிரிவில் 75க்கு மேல் எடை பிரிவில் மன்னர் சிவா முதல் இடத்தையும், 45லிருந்து 55கிலோ எடை பிரிவில் திருகார்த்திக் 2ம் இடத்தையும்,65 லிருந்து 75 எடை பிரிவில் ஜிஷ்ணு 2ம் இடத்தையும், பெண்கள் 60 லிருந்து 70 கிலோ எடை பிரிவில் ஜெயஸ்ரீ முதல் இடத்தையும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும்,பயிற்சியாளர் பெருமாளையும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ