மேலும் செய்திகள்
பல்கலையில் கருத்தரங்கம்
08-Feb-2025
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை ஆங்கிலம் மற்றும் அயல் மொழி துறை சார்பில் பன்னாட்டு ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியை பமீலா சாமன்ஸ் பேசினார். ஆங்கிலத் துறை தலைவர் பொன்.மதன் வரவேற்றார். தர்மபுரி ஏரியூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் நாகராஜன் வாழ்த்தினார். பல்கலை முன்னாள் செனட் உறுப்பினர் நடராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.
08-Feb-2025