உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை

அரசு மருத்துவமனையில்  சர்வர் பிரச்னை

சிவகங்கை,:தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்வர் பிரச்னையால் நோயாளிகள் ஓபி சீட்டு பதிவதிலும், டாக்டர்கள் நோயாளிகளுக்கு உரிய மருந்து மாத்திரைகளை கணினியில் பதிவு செய்வதிலும் சிரமம் ஏற்பட்டது.அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஓபி சீட்டு அவசியம். ஓபி சீட்டு பதிவெண் அடிப்படையில் நோயாளியின் நோய் குறித்த முழு விவரமும் சர்வரில் இருக்கும். அதன்படிதான் சிகிச்சை, மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. நேற்றும் நேற்று முன்தினமும் அரசு மருத்துவமனைகளில் உள்ள சர்வர் பிரச்னை ஏற்பட்டது.சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலை 8:00 மணியில் இருந்து 9:45 வரைக்கும் சர்வர் இயங்கவில்லை. 510 புற நோயாளிகள் நீண்ட நேரமாக காத்திருந்து ஓபி சீட்டு பதிய முடியாமல் டாக்டரை பார்த்து சென்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும், சர்வர்களை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை