மேலும் செய்திகள்
முத்தனேந்தலில் முழுமை பெறாத சர்வீஸ் ரோடு
30-Dec-2024
திருப்புத்துார்; மேலுார் -காரைக்குடி நான்கு வழிச்சாலையில் பிள்ளையார்பட்டிக்கு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்புத்துார் வழியாக மேலுாரிலிருந்து காரைக்குடிக்கு 45.8 கி.மீ,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பிள்ளையார்பட்டி பின்புறமாக செல்லும் நான்கு வழிச்சாலை திருப்புத்துார்- குன்றக்குடி ரோட்டில் சந்திக்கிறது. முன்னதாக பிள்ளையார்பட்டி கோயிலுக்கு அடுத்து கண்மாய் வழியாக நான்குவழிச்சாலை செல்கிறது.இப்பகுதியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சர்வீஸ் ரோடு அமைத்தால் ஆன்மிக சுற்றுலா வரும் பயணிகள் செல்ல வசதியாக இந்த சர்வீஸ் ரோடு பயன்படும். நான்கு வழிச்சாலையிலிருந்து இங்கு போடப்படும் சர்வீஸ் ரோடு மருதங்குடி செல்லும் ரோட்டில் இணைக்கப்பட்டால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும்.தேசிய நெடுஞ்சாலையினர் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் அதற்கு இணையான சர்வீஸ் ரோடு பிள்ளையார்பட்டிக்கு போடப்படும். அதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இன்னும் முடிவாகவில்லை.' என்றனர். பிள்ளையார்பட்டியிலிருந்து நான்கு வழிச்சாலை தஞ்சாவூர் வரை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால். சர்வீஸ் ரோடு எங்கு என்பது இறுதியாகவில்லை என்றனர்.
30-Dec-2024