உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயிலில் சனி பிரதோஷ யாகம்

திருத்தளிநாதர் கோயிலில் சனி பிரதோஷ யாகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி,-அம்பாள் பிரகார வலம் வந்தனர். குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்திதேவர் முன் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார் களால் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்து நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. உற்ஸவ சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந் தருள தீபாராதனை நடந்தது. பிரதோஷநாதர்-, அம்பாள் கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை