உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  18 கி.மீ., தொலைவில் ஓட்டுச்சாவடி விண்ணப்பத்தில் அதிர்ச்சி தகவல்

 18 கி.மீ., தொலைவில் ஓட்டுச்சாவடி விண்ணப்பத்தில் அதிர்ச்சி தகவல்

சிவகங்கை: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடக்கிறது. சிவகங்கை நகராட்சி பகுதியில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் வாக்காளர் பெயர், முகவரி போன்றவை சிவகங்கையாக இருந்த போதிலும், ஓட்டுச்சாவடி 18 கி.மீ., துாரத்தில் உள்ள அழகமாநகரி அரசு மேல்நிலைபள்ளி என உள்ளது. காரைக்குடி நகரில் உள்ள வாக்காளர்களுக்கு தேவகோட்டை என தவறுதலாக முகவரி காட்டப் பட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் ஒருவர் கூறியதாவது: நான் சிவகங்கையில் வசிக்கிறேன். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி தான் ஓட்டுச்சாவடி. எனக்கு மட்டும் அழகமாநகரி அரசு மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி என குறிப்பிட்டுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ