காரைக்குடியில் கடையடைப்பு
காரைக்குடி : காரைக்குடியில் சொத்து வரியை அடாவடியாக வசூல் செய்யும் அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தொழில் வணிக கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.காரைக்குடி மாநகராட்சியில் வரி வசூலில் ஈடுபடும் அதிகாரிகள் அடாவடியாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும், மாநகர வரி செலுத்துவோர் மக்கள் மன்றத் குழுவினர் மற்றும் தொழில் வணிகக் கழகம் புகார் எழுப்பியதோடு மாநகராட்சியிலும் மனு அளித்தனர். ஆனால் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் சொத்து வரியை குறைத்திடவும் அதிகாரிகளின் அராஜகத்தை கண்டித்து மார்ச் 28 ம் தேதி கடை அடைப்பு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தொழில் வணிகர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர், கடை வியாபாரிகள், பேக்கரி, ஹோட்டல் டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.