மேலும் செய்திகள்
கோதுமை கிடைக்காமல் ரேஷனில் ஏமாற்றம்
21-Apr-2025
சிவகங்கை : தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு காரணமாக கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.தமிழக அளவில் கூட்டுறவு, கூட்டுறவு பண்டகசாலை, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 35 ஆயிரத்து 169 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ஒரு கார்டுக்கு 1 லிட்டர் பாமாயில் ரூ.25 க்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு சரியான அளவிற்கு பாமாயில் வழங்கப்படவில்லை. இதனால் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: பாமாயில் டெண்டர் விட்டதில், பிரச்னை எழுந்துள்ளது. இதனால் வினியோகம் தடைபட்டுள்ளது, என்றனர்.
21-Apr-2025