சமூக நல விடுதிகளில் வார்டன், சமையலர் தட்டுப்பாடு
சிவகங்கை: சமூக நல விடுதிகளில் காலியாக உள்ள வார்டன், சமையலர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 6 கல்லுாரி, 38 பள்ளி மாணவருக்கான சமூக நல விடுதி செயல் படுகிறது. மாணவர்கள் விடுதியில் தங்கி உணவருந்தி, சிறப்பு வகுப்புகளில் கல்வி கற்க வேண்டும். 50 மாணவர்களுக்கு ஒரு வார்டன், ஒரு சமையலர், இரவு காவலர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். 50 மாணவர்களுக்கு மேல் உள்ள விடுதிகளுக்கு கூடுதல் சமையலர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இம்மாவட்ட விடுதிகள் 44ல் 20 வார்டன்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மற்ற விடுதிகளை இவர்களே கூடுதலாக கவனித்து வருகின்றனர். போதிய சமையலர் பணியிடமும் இல்லை. இரவு காவலர்களே இல்லாத விடுதிகளில் தங்கும் மாணவ, மாணவிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 'பயோமெட்ரிக்' பதிவுக்கு வரவேற்பு ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனரின் உத்தர வால், இங்குள்ள 44 விடுதி களில் 21 இடங்களில் மாணவர் வருகை குறித்து அறிய 'பயோமெட்ரிக்' வருகை பதிவு இயந்திரம் பொருத்தியுள்ளனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் பணியிடம் பல மாதங் களாக காலியாக உள்ளது.