உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி

வீணாகி வரும் சில்வர் குப்பை தொட்டி

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் தெருக்களில் வைப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட சில்வர் குப்பை தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் துருப்பிடித்து வருகின்றன.திருப்புவனம் தெருக்களில் குப்பைகளை சேகரிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். அனைத்து குப்பைகளையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கொட்டுவதால் சுகாதார கேடு நிலவி வருகிறது. மேலும் குப்பை தரம் பிரிக்கப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுகிறது. இதனை தவிர்க்கவும் திருப்புவனம் பேரூராட்சி வீதிகளில் குப்பைகளை எளிதாக சேகரிக்க வசதியாக சில்வர் குப்பை தொட்டிகள் பொருத்த திட்டமிடப்பட்டு ஒரு குப்பை தொட்டி 40 ஆயிரம் ரூபாய் வீதம் 20 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன.சில்வர் குப்பை தொட்டிகளில் சேகரமாகும் குப்பையை எளிதாக புதிய பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கொட்டுவதற்கு வசதியாக தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகள், ஓட்டல்கள், டீகடைகள் ஆகியவற்றின் வசதிக்காக இந்த ஸ்டாண்ட் வசதி உள்ள சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை பொருத்தாமல் வெயிலிலும், மழையிலும் வீணாகி துருப்பிடித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி