உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளில் சிங்கம்புணரி குளோபல் பள்ளி சாதனை

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளில் சிங்கம்புணரி குளோபல் பள்ளி சாதனை

சிங்கம்புணரி : சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவில் சிங்கம்புணரி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி சார்பில் பிளஸ் 2 தேர்வை 102பேர் எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். எம். நந்தகுமார்482/500 (கணிதம், வேதியியலில் 100) பெற்று முதலிடம் பிடித்தார். மாணவன் ஏ.எஸ்.அப்துல் முகைமின்481/500(2ம் இடம்), மாணவி ஆர்.கோபிகா478/500(3ம் இடம்) பெற்றனர். 17 மாணவர்கள்450க்கு மேல், 44 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர். 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில்117மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். எம்.ஜெயன்விதுனன்490/500 மதிப்பெண் பெற்று முதல் இடமும், ஆர்.யஷ்வந்த்487/500மதிப்பெண் பெற்று 2ம் இடம்,கே.சுபானுசங்கரி484/500மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்தனர். 34 மாணவர்கள்450க்கு மேலும், 70 பேர்400க்கும் மேலும் பெற்றனர். தமிழ் பாடத்தில் 2 பேர்100/100, மற்றும் ஐ.டி., பாடத்தில் 8 பேர்100/100மதிப்பெண் பெற்றனர். சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் தொடர்ந்து சாதனை புரிந்து வரும் குளோபல் பள்ளி மாணவர்களை தாளாளர் காந்தி, இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். ஜே.இ.இ., மெயின் 2025 தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதன்மை இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !