உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உள்ளிருப்பு போராட்டம் 

 உள்ளிருப்பு போராட்டம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மதுக்கடையில் காலி மது பாட்டில் வாங்க மறுத்து, ஊழி யர்கள் மேலாளர் அலு வலகம் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட அளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கி செல்லும் மதுபாட்டிலில் 'ஸ்டிக்கர்' ஒட்டி, அந்த பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது, ரூ.10யை திருப்பி தரும் நடைமுறை நாளை (நவ.,26) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் சங்கத்தினர் சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் கூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சங்க நிர்வாகிகள் டாஸ்மாக் மேலாளர் சுரேஷ் கண்ணாவிடம் கோரிக்கை மனுவை வழங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்