உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் கோபமடைந்த சிவகங்கை கலெக்டர்  

விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் கோபமடைந்த சிவகங்கை கலெக்டர்  

சிவகங்கை: விவசாயிகளின் குறைகளை தீர்க்க கூட்டத்திற்கு கலெக்டர் வந்த நிலையில் பதில் தெரிவிக்க அதிகாரிகள் பலர் வராததால் கலெக்டர் பொற்கொடி கடிந்து கொண்டார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொற்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கலெக்டர் பி.ஏ., (வேளாண்மை) தனலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: ஆதிமூலம், திருப்புவனம்: மாவட்ட அளவில் நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பெரியாறு, வைகையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை முறையாக பெற்றுத்தர வேண்டும். திரவியம், தேவகோட்டை: மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு (2024--25க்கு) ரூ.1.50 கோடி ஒதுக்கியும், கறவை மாடு வாங்க கடன் வழங்க மறுக்கின்றனர். அய்யாச்சாமி, இளையான்குடி: இளையான்குடி அருகே நல்லாண்டிபுரத்தில் புதிதாக துணை மின் நிலையம் அமைத்து தர பல முறை கோரிக்கை வைத்தும், அமையாததால் மின்பிரச்னையில் மக்கள் தவிக்கின்றனர். நாகநாதன், தேவகோட்டை: தேவகோட்டை தாலுகாவில் நாள் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. சிவாஜி, காளையார்கோவில்: நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடு, மாடுகளுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. மோகன், திருப்புவனம்: தேசிய வங்கிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க மறுக்கின்றன. வெள்ளை, திருப்புவனம்: நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூடைக்கு, கூலியாக ரூ.10 மட்டுமே தருவதால், புரோக்கர்கள் மூலம் மூடைக்கு விவசாயிகளிடம் ரூ.50 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். ராஜா, வழக்கறிஞர், திருப்புவனம்: பூவந்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கிரானைட் குவாரி கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டி, நிலங்களை பாழ்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை