மேலும் செய்திகள்
ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
19-Sep-2025
சிவகங்கை:' முதல் போக சாகு படிக்கு பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கென கட்டாணிபட்டி ஷட்டரில் இருந்து நேற்று திறக்கப்பட்டது. பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதுரை மாவட்டம், மேலுார் அருகே குறிச்சி கண்மாய் வழியாக சிவகங்கை மாவட்டத்திற்குள் அணை தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல் போக சாகு படிக்கு தினமும் 60 கன அடி தண்ணீர் தொடர்ந்து 45 நாட்களுக்கு திறந்து விடப்படும். இந்த தண்ணீர் கட்டாணிபட்டி 1, 2 மற்றும் 48ம் கால்வாய், ஷீல்டு, லெசீஸ் கால்வாய் வழியாக 120 கண்மாய்களை நிரப்பி, கண்மாய் பாசனம் மூலம் 6000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், பெரியாறு அணை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்: சோழபுரம் விவசாயி மாரி கூறிய தாவது: கட்டாணிபட்டி 1 கால்வாய் ஷட்டர் வழியாக சிவகங்கை மாவட்டத்திற்குள் செல்லும் அணை நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று திறந்து விட்டனர். கட்டாணிபட்டி முதல் சோழபுரம் வரை யிலான 120 கண்மாய்களில் நீரை தேக்கி, ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படும் என்றார்.
19-Sep-2025