உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுநீரகவியல் டாக்டர் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி

சிறுநீரகவியல் டாக்டர் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறுநீரகவியல் சிகிச்சை அளிப்பதற்கு நெப்ராலஜி டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் மதுரைக்கு அனுப்பும் நிலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக 800 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனை தொடங்கி 13 ஆண்டு கடந்த நிலையிலும் சிறுநீரகவியல் சிகிச்சை அளிப்பதற்கு நெப்ராலஜி டாக்டர் இல்லை. இங்கு தினமும் 24 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்குரிய சிறுநீரகவியல் டாக்டர் இல்லததால் டாக்டருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவரே டயாலிசிஸ் சிகிச்சை செய்கிறார்.சிறுநீரக கல், சிறுநீரகதொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் யூராலஜி டாக்டரும் இல்லை. அதேபோல் மருத்துவக் கல்லுாரியில் பிரத்யேக சிகிச்சையான நரம்பியல், இதயவியல் உள்ளிட்ட துறைகளுக்கு டாக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் இந்த சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களை பணியில் அமர்த்தி நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சையும் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ