உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குற்றச்சம்பவம் தவிர்க்க 4000 கேமரா சிவகங்கை எஸ்.பி., அலுவலகம் தகவல்

குற்றச்சம்பவம் தவிர்க்க 4000 கேமரா சிவகங்கை எஸ்.பி., அலுவலகம் தகவல்

சிவகங்கை : மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கும் விதமாக 4,000 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்தனர். மாவட்ட அளவில் முக்கிய ரோடுகள் சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில் நன்கொடையாளர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பயன்பாடு இல்லாத கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை, திருப்புவனத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் மூலமும் மாவட்ட எல்லையோர செக்போஸ்ட்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கின்றனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக நன்கொடையாளர்கள் உதவியுடன் குற்றச்சம்பவங்களை தடுக்க 4,000 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.ஆண்டு தோறும் 1,000 கேமராக்கள் வீதம் பொருத்தலாம் என முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை