உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டுச்சாவடி மதிப்பூதியம் இழுபறி  சிவகங்கை வி.ஏ.ஓ.,க்கள் புகார் 

ஓட்டுச்சாவடி மதிப்பூதியம் இழுபறி  சிவகங்கை வி.ஏ.ஓ.,க்கள் புகார் 

சிவகங்கை: எம்.பி., தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி பராமரிப்பிற்கான மதிப்பூதியத்தை வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்புத்துார் தொகுதிக்கு உட்பட்ட 1,357 ஓட்டுச்சாவடிகளில் 2024 ம் ஆண்டிற்கான எம்.பி., தேர்தல் நடந்தது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் மேற்கெள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ரூ.1,300 வரை மதிப்பூதியம் வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், ஓட்டுச்சாவடியில் அடிப்படை வசதிகளை செய்ய செலவழித்த வி.ஏ.ஓ.,க்களுக்கு இது வரை தேர்தல் கமிஷன் அறிவித்த ஓட்டுச்சாவடிக்கான ரூ.1,300யை மாவட்ட நிர்வாகம் இது வரை வழங்கவில்லை என வி.ஏ.ஓ.,க்கள் புகார் தெரிவித்தனர்.சிவகங்கை மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள் கூறியதாவது: எம்.பி., தேர்தலுக்காக ஓட்டுச்சாவடியில் அடிப்படை வசதிகளை செய்ய ஒரு ஓட்டுச்சாவடிக்கு ரூ.1,300 மதிப்பூதியம் வழங்குவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தேர்தலின் போது ஒரு பகுதியாக ரூ.650 ம் அடுத்தகட்டமாக எஞ்சிய தொகையை வழங்க வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி பராமரிப்பிற்கென வி.ஏ.ஓ.,க்களுக்கு இது வரை மதிப்பூதியம் வழங்கவே இல்லை. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் முதற்கட்ட மதிப்பூதியமாக ரூ.650 வழங்கிவிட்டனர். சிவகங்கை மாவட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு ஒட்டு மொத்த மதிப்பூதியமும் தரவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ