மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
27 minutes ago
பயிற்சி முகாம்
27 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
28 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
28 minutes ago
சிலை பிரதிஷ்டை
29 minutes ago
சிவகங்கை, : சிவகங்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். கல்லுாரி மாணவிகளுக்கான கால்பந்து, கபடி, கையுந்து பந்து போட்டி நடந்தது. இதில் மாவட்ட அளவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கபடி, கையுந்து பந்து ஆகிய போட்டிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. கால்பந்து போட்டியில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி அணி 2ம் இடமும், சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி அணி 3ம் இடம் பிடித்தனர். கபடி போட்டியில் 2 ம் இடம் தளக்காவூர் ஸ்போர்ட் கிளப் அணி, 3ம் இடத்தை சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி அணி வென்றது. கையுந்து பந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மாணவிகள்2ம் இடமும், மூன்றாம் இடத்தை புதுவயல் ஆர்.சி., மேல் நிலை பள்ளி அணிகள் வென்றது.
27 minutes ago
27 minutes ago
28 minutes ago
28 minutes ago
29 minutes ago