| ADDED : ஜூலை 25, 2011 10:06 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகேயுள்ள என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில் மகா உற்சவம் துவங்கியது.நேற்று காலை 6.30 மணிக்கு வளரொளி விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம் துவங்கியது.தொடர்ந்து வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை 3 மணிக்கு கொடிமரத்தருகே அங்குரார்ப்பணம் நடந்தது.தொடர்ந்து காப்பு கட்டப்பட்டது. இரவில் சிம்ம வாகனத்தில் வயிரவர் வீதி உலா வந்தார். இன்று காலை 8 மணிக்கு மகா உற்சவத்திற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விடப்படும். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் வயிரவர் சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர் தினசரி காலை சுவாமி புறப்பாடும், மாலையில் கலை,இசை,பேச்சு நிகழ்ச்சிகளும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். 9ம் திருநாளாக ஆக.2 ம் தேதியன்று தேரோட்டமும், 10ம் திருநாளாக அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், இரவில் பூப்பல்லக்கும் , ஆக.3 ம் தேதியன்று தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாணமும்,பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும்.