உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் 12 பவுன் நகை வழிப்பறி : 3 பேர் கும்பல் தொடர்ந்து கைவரிசை

சிங்கம்புணரியில் 12 பவுன் நகை வழிப்பறி : 3 பேர் கும்பல் தொடர்ந்து கைவரிசை

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வீட்டிற்கு முன் நின்றிருந்த பெண்களிடம் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 பவுன் செயினை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள எஸ்.எஸ்., காலனியை சேர்ந்த நடராஜன் மனைவி சின்னம்மாள்(55). நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமாள் கழுத்தில் இருந்த 8.5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர். சின்னம்மாள் கூச்சலிடவே, மர்மநபர்களும் திருடர்களை பிடிப்பவர்கள் போல் கூச்சலிட்டவாரே ஓடினர். இதனால், அப்பகுதி மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. பின்,சிறிது தூரம் சென்றதும், வீட்டு வாசலில் நின்ற சுப்பையாவின் மனைவி கருப்பாயி (60)கழுத்தில் கிடந்த 3.5 பவுன் செயினையும் இதேகும்பல் பறித்துக்கொண்டு ஓடியது. சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் விசாரிக்கிறார்.

தொடர் திருட்டு: மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோல் 3 பேர் கும்பல் வழிப்பறி செய்யும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 28 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு, சிவகங்கை காலேஜ் ரோட்டை சேர்ந்த விக்டர் வீட்டில் தூங்கியபோது, அரைக்கால் டவுசருடன் வந்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி, மிரட்டி 2 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி