உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு கேபிள் "டிவி நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு பதிவு

அரசு கேபிள் "டிவி நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு பதிவு

சிவகங்கை : அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் லைன்மேன், டெக்னீசியன் பணிக்கு செப்.,22 க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் தனியார் 'டிவி' சேனல்களின் அராஜக போக்கால்,கேபிள் ஆப்பரேட்டர்கள் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களுக்கு உரிய வருவாய் இன்றி சிரமம் அடைந்தனர். இவற்றை போக்க கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெ., அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் துவக்கப்பட்டு, ஆபரேட்டர்கள் பாதுகாக்கப்படுவர் என்றார். அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி செயல்பட துவங்கியது. பதிவு : மாவட்ட வாரியாக செயல்படும் அரசு கேபிள் 'டிவி' நிறுவன எம்.எஸ்.ஓ.,க்களில் பணியாற்ற, லைன்மேன், டிப்ளமோ முடித்தவர்களுக்கு டெக்னீசியன், ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு எலக்ட்ரீசியன் பணியிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, செப்.,22ம் தேதிக்குள், ஏற்கனவே கேபிள் டிவி நிறுவனத்தில் பணியாற்றியதற்கான சான்றை பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் தங்களின் கல்வி சான்றுடன் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ