உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷன் அருகேதொடர் திருட்டு

ரயில்வே ஸ்டேஷன் அருகேதொடர் திருட்டு

மானாமதுரை:மானாமதுரை ரயில்வே ஜங்ஷன் - பழைய பஸ் ஸ்டாண்ட் வீதி வரை தெருவிளக்குள் இல்லாததால், இப்பகுதியில் வழிப்பறி அதிகரித்துள்ளது.ரயில்வே ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதையில் தெருவிளக்குகள் இல்லை. இத்தெருக்கள் எந்தநேரமும் இருண்ட பகுதியாக காட்சி அளிக்கும். இந்த வழியாக ஏராளமான ரயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த இருட்டை பயன்படுத்தி, திருட்டு கும்பல், பெண்களிடம் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.இங்கு தெருவிளக்கு இல்லாததால், கடந்த மாதம் திருச்சியை சேர்ந்த பெண் பயணியிடம் 13 பவுன் செயினை மர்ம நபர் வழிப்பறி செய்தார். அதே போன்று இத்தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்து, டூவீலரில் வாலிபர் தப்பித்தார். இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால், பெண்கள் அச்சத்துடன் உள்ளனர். போலீசார் இங்கு ரோந்து பணிகளை அதிகப்படுத்தவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி