உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீரில் சாக்கடை கலப்பு"புழு வந்ததால் மக்கள் அதிர்ச்சி

குடிநீரில் சாக்கடை கலப்பு"புழு வந்ததால் மக்கள் அதிர்ச்சி

காரைக்குடி:காரைக்குடி நகராட்சி 22 வது வார்டு குடிநீர் குழாயில் சாக்கடை நீருடன், புழுவும் வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.வ.உ.சி., ரோட்டின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நகராட்சி சார்பில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழாயில் நேற்று காலை 8 மணிக்கு அப்பகுதியினர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர் கலங்களாகவும், துர்நாற்றத்துடன் வந்தது. அப்பகுதியினர் வார்டு கவுன்சிலர் மெய்யரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நகராட்சி பொறியாளர் மணி தலைமையில் பணியாளர்கள் சென்று குழாய் தண்ணீரை சோதனை செய்தனர். தண்ணீருடன் 'புழு' விழுந்துள்ளதாக அவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, குடிநீர் குழாயை தோண்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி பொறியாளர் மணி கூறுகையில், '' குடிநீர் பைப் சேதமடைந்ததால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த குழாயை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் குழாயை வேறு இடத்தில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ