உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதகுபட்டியில் நில மோசடி

மதகுபட்டியில் நில மோசடி

சிவகங்கை:மதகுபட்டியில் போலி ஆவணம் தயாரித்து 1.15 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ய முயன்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.காரைக்குடி அருகே கல்லுப்பட்டியை சேர்ந்த அந்தோணி மகன் பிரான்சிஸ். இவருக்கு சொந்தமான நிலம் மதகுபட்டி அருகே ஒக்கூரில் 1.15 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்திற்கு ஒக்கூரை சேர்ந்த சுப்பிரமணியன் தலைமையில் செந்தில்நாதன், மதகுபட்டி முருகேசன் ஆகியோர் போலியாக பட்டா தயாரித்துள்ளனர். இப்பட்டாவின் மூலம், நிலங்களை ராஜாத்தி என்பவருக்கு விற்க முயன்றனர். இது குறித்து அறிந்த பிரான்சிஸ், மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக, சுப்பிரமணியன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை