உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் வேகமாக செல்லும் தனியார் பஸ்களால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.திருப்புவனம், திருப்பாச்சேத்தி மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம். வெளி மாநில பயணிகள் ராமேஸ்வரம் செல்வதாலும் போக்குவரத்து பிசியாக இருக்கும். பயணிகளை ஏற்றுவதில் போட்டிபோடும் தனியார் பஸ்கள் அசூர வேகத்திலும்,காதை செவிடாக்கும் 'ஹாரன்' சப்தத்தை எழுப்புகின்றன.டூவீலர்கள், ஆட்டோக்கள், சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். வேகத்தை கட்டுப்படுத்தவேண்டிய வட்டார போக்குவரத்து, போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்