திறன் வளர்ப்பு பயிற்சி
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமாநில மன்றம் சார்பில் தொழில் திறன் வளர்ப்பு பட்டறை நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன்துவக்கினார். இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர்பாலமுருகன் முன்னிலை வகித்தனர். திருச்சி அருணா அல்லாய்ஸ் ஸ்டீல்ஸ்காவேரி மணியன், தொழில்முறைபயிற்றுநர் சரவணன், ஸ்ரீபெரும்புதுார் டெல்பி டிவிஎஸ் புருஷோத்தமன், திருச்சி சங்கர் ஐ.ஏ.எஸ்.,அகாடமி பிரபாகர், தஞ்சை சி- அகாடமி காயத்ரி, கோவை எஸ்.ஆர்., அகாடமி தேவசேனாதிபதி, சிவகங்கை செம்மண் அறக்கட்டளை ராஜா, காரைக்குடி கதிர்வேல் அகாடமிகேத்தரின், திருச்சி கன்செர்வ் சொலுஷன்ஸ் பிரசன்னா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாட்டினை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் பாண்டியராஜன், உதவி பேராசிரியர் அருண்குமார் செய்தனர்.