மேலும் செய்திகள்
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
30-Jun-2025
கீழடி; சிவகங்கை மாவட்டம் முக்குடி கிணற்றில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட கணேசனின் மண்டை ஓடு, எலும்பு ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் குரண்டியைச் சேர்ந்தவர் கணேசன் 27, கஞ்சா வியாபாரியான இவரை நண்பர்களான குரண்டி வாணிகருப்பு 37, சுரேந்திரகுமார் 33, திருமுருகன் 30, இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக சமாதானம் பேச அழைத்து வந்து தாக்கியதில் கணேசன் உயிரிழந்தார். கணேசனின் உடலை மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான முக்குடி பகுதி கிணற்றில் வீசி விட்டு தலைமறைவாகினர். ஜூலை 23ம் தேதி கிணற்றில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக வந்த புகாரையடுத்து வி.ஏ.ஓ., முரளிதரன் தலைமையில் திருப்புவனம் போலீசார் உடலின் சிதைந்த பாகங்களை மீட்டு தடயவியல் ஆய்விற்கு பின் அங்கேயே புதைத்தனர். கணேசனின் உடல் எலும்பு உள்ளிட்டவை கிடைக்க வில்லை. கிணற்றில் கோடையிலும் தண்ணீர் நிரம்பி இருந்ததால் ஐந்து நாட்களாக மோட்டார் வைத்து கிணற்று நீரை வெளியேற்றி போலீசார் தேடினர். நேற்று மாலை கணேசனின் மண்டை ஓடு மற்றும் எலும்பு கண்டறியப்பட்டு ஆய்விற்காக போலீசார் எடுத்து சென்றனர். கணேசன் கொலை தொடர்பாக நண்பர்கள் மூவர் ஜூலை 26ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
30-Jun-2025