உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்மார்ட் மீட்டர் தட்டுப்பாடு தாமதமாகும் மின் இணைப்பு

ஸ்மார்ட் மீட்டர் தட்டுப்பாடு தாமதமாகும் மின் இணைப்பு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் வீடு, கடைகளுக்கான மின்இணைப்பிற்கு ஸ்மார்ட் மீட்டர் தட்டுப்பாட்டால் தாமதமாவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வீடு, வணிக,தொழில் நிறுவனங்களுக்கு மின்இணைப்பு தேவைப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி மின்துறையினர் இணைப்பு கொடுத்து வருகின்றனர். போதிய ஸ்மார்ட் மீட்டர் சப்ளை இல்லாததால் புதிய இணைப்பு தாமதமாகி வருகிறது. மின் இணைப்பிற்கான விண்ணப்பங்கள் சேர்ந்து வருகின்றன. மின் இணைப்பு துண்டிப்பு, திரும்பப் பெறப்பட்ட பழைய மீட்டர்கள் வைத்து ஓரளவு மின் இணைப்பு கொடுக்கின்றனர்.கட்டுமானங்களுக்கான இணைப்பு வழக்கமான வேகத்தில் கொடுக்கின்றனர். ஆனால் வீடுகளுக்கு புதிய இணைப்பு கேட்பவர்களுக்கு உடனடியாக கொடுக்க மீட்டர் இல்லாமல் தாமதமாகிறது. கடந்த 3 மாதங்களாக இந்த நிலை நீடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !