மேலும் செய்திகள்
ரயிலில் 25 கிலோ புகையிலை பறிமுதல்
17-Mar-2025
காரைக்குடி: காரைக்குடி வழியாக ரயில்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் கடைகளில் சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தாலும், புகையிலை விற்பனை தொடர்ந்து வருகிறது. ரயில் வழியாக புகையிலை மற்றும் கஞ்சா பொருட்கள் கடத்தல் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் புவனேஸ்வர் ரயிலில் 25 கிலோ புகையிலை குட்கா போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, மீண்டும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில், கிடந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலையை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்.ஐ., சவுதமா பறிமுதல் செய்தனர். ரயிலில் கஞ்சா, புகையிலை கடத்தலை தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
17-Mar-2025