மேலும் செய்திகள்
'வென்டிலேட்டரில்' இருந்த பெண்ணிடம் சில்மிஷம்
17-Apr-2025
திருப்புவனம் : திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பாம்பு புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். சித்த மருத்துவ பிரிவு அருகே மருந்து கோடவுன் செயல்படுகிறது.தேவைக்கு ஏற்ப தினசரி மருந்து எடுத்து பயன்படுத்தப்படும், நேற்று முன்தினம் மருந்து கோடவுனை திறந்து வைத்து விட்டு ஊழியர்கள் பணியாற்றிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அருகில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் பார்த்ததையடுத்து கோடவுனில் இருந்த ஊழியர்கள் வெளியேறியதுடன் மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தேடியும் பாம்பு சிக்க இல்லை. கோடவுனில் ஏராளமான மருந்து உள்ள நிலையில் அவற்றை அகற்றி பாம்பை தேட முடியாமல் வீரர்கள் திரும்பி விட்டனர். ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
17-Apr-2025