உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண் பரிசோதனை கருத்தரங்கு 

மண் பரிசோதனை கருத்தரங்கு 

சிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டியில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செல்வராஜ், மண் மாதிரி சேகரிப்பு, விதை நேர்த்தி உள்ளிட்ட மண்ணியல் சார்ந்த கருத்துக்களை விவசாயிகளுக்கு தெரிவித்தார்.தொழில்நுட்ப உதவி மேலாளர் ராஜா, நெல் விதை, உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் அளித்தார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் தம்பிதுரை, கீதா உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்