மேலும் செய்திகள்
குறித்த நேரத்தில் பஸ் தேவை: பயணியர் வலியுறுத்தல்
04-Nov-2025
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து எஸ்.பி.பட்டினத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் ஊர் பெயர் பலகை இல்லாமல், பயணிகள் சிரமம் அடைவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து எல்.இ.டி., பெயர் பலகை பொருத்தப் பட்டுள்ளது. காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை 8:30 மணிக்கு தேவகோட்டை, வழியாக எஸ்.பி.பட்டினம் வரை அரசு பஸ் தினமும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை நம்பி அரசு ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். இந்த பஸ், குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுவதில்லை. பல நேரங்களில் இயங்குவதே இல்லை என பயணிகள் புகார் எழுப்பினர். தவிர, தினமும் ஒரே பஸ் இயக்கப்படாமல், வேறு வேறு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், பஸ்சில் ஊர் பெயர் பலகை இல்லாததால் பயணிகள் குழப்பம் அடைவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக முறையாக ஒரே பேருந்து இயக்கப்படுவதோடு பஸ்சில் எல்.இ.டி., பெயர் பலகை யும் பொருத்தப்பட்டு உள்ளது.
04-Nov-2025