மேலும் செய்திகள்
பார்வையற்றோருக்கு பஸ் பாஸ் பெற முகாம்
12-Mar-2025
சிவகங்கை,: இலவச பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம் ஏப்., 1 மற்றும் 2 ம் தேதி சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடை பெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி, கல்லுாரி, மருத்துவம், தொழில்சார்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஏப்.,1ல் பார்வையற்றவர்களுக்கும், ஏப்., 2 ம் தேதி மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிவகங்கை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும். இந்த முகாமில், புதிய பஸ் பாஸ், பழையதை புதுப்பித்தும் தரப்படும். பங்கேற்போர் தேசிய அடையாள அட்டை ஒரிஜினல், நகல், யு.டி.ஐ.டி., நகல், போட்டோ 4, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல், பணிபுரியும், கல்வி நிறுவன சான்று, சுயதொழில் சான்று, கடந்த ஆண்டு பெற்ற பஸ் பாஸ் உடன் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.
12-Mar-2025