உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

மானாமதுரை, : மானாமதுரை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா மானாமதுரை இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன்,தாளாளர் கிறிஸ்டிராஜ் தலைமையில் மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் துவங்கியது.தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்ஸி,முதல்வர் வள்ளிமயில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒ.வெ.செ., மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் பரிசு,சான்றிதழ் வழங்கினார்.*மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறுவனர் ராஜேஸ்வரி நகராட்சி கவுன்சிலர் கங்கா, தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர் சாரதா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை