உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புனித மரியன்னை பள்ளி மாணவிகள் மாநில சாதனை

புனித மரியன்னை பள்ளி மாணவிகள் மாநில சாதனை

தேவகோட்டை: கரூரில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். ஜுடோ போட்டியில் 10 ம் வகுப்பு நேத்ரா வெள்ளிபதக்கம் வென்றார். 8ம் வகுப்பு தர்ஷினி, பிளஸ் 2 பவதாரிணி, கனிஷ்கா, சஹானா வெண்கல பதக்கம் வென்றனர். தஞ்சாவூரில் நடந்த மாநில தடகள போட்டியில் குண்டு எறிதலில் 8 ம் வகுப்பு ஹர்சிதா வெண்கல பதக்கம் வென்றார். எஸ்.ஜி.பி. ஐ போட்டியில் புதிய விளையாட்டான உஸ்யூ போட்டியில் முறையே பிளஸ் 2 மாணவிகள் சிவனேஸ்வரி, கனிஷ்கா, தவபாண்டீஸ்வரி ரிஜிஆனந்தி, இந்து தமிழச்சி, கஸ்தூரி ஆகிய ஆறு பேர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்று ஜம்மு காஷ்மீர், மணிப்பூரில் நடைபெறும் போட்டிக்கு செல்ல உள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் பாத்திமாமேரி, தலைமையாசிரியை எலிசபெத், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ