உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓய்வூதியம் வழங்க கோரி ஆக., 23 மாநில மாநாடு; ஊராட்சி செயலர்கள் முடிவு

ஓய்வூதியம் வழங்க கோரி ஆக., 23 மாநில மாநாடு; ஊராட்சி செயலர்கள் முடிவு

சிவகங்கை; ''ஓய்வூதியம் வழங்குவது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆக.,23 மாநில மாநாடு நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகி பாக்யராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கிராமங்களில் துாய்மை பணி செய்யும் துாய்மை காவலர்களுக்கு மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தரம் செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் 16 ஆண்டுகளாக பணிபுரியும் தேசிய வேலை உறுதித்திட்ட கம்ப்யூட்டர் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 23 திருச்சியில் நடக்க உள்ள மாநில மாநாடு மூலம் தீர்மானங் கள் நிறைவேற்றப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை