உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில கராத்தே போட்டிகள்

மாநில கராத்தே போட்டிகள்

மானாமதுரை : மானாமதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மானாமதுரையில் 4ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நேற்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.போட்டிகளில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். கராத்தே போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிவநாகர்ஜூன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை