உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமிய அஞ்சல் ஊழியர்களை 8வது சம்பளகுழுவில் சேர்க்காவிட்டால் வேலை நிறுத்தம் மாநில செயலாளர் பேட்டி

கிராமிய அஞ்சல் ஊழியர்களை 8வது சம்பளகுழுவில் சேர்க்காவிட்டால் வேலை நிறுத்தம் மாநில செயலாளர் பேட்டி

சிவகங்கை:''மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது சம்பள குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை சேர்க்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் '' என சிவகங்கையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சாந்தமூர்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் 30 ஆயிரம் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உள்ளனர். அகில இந்திய அளவில் 4.5 லட்சம் பேர் உள்ளனர். 1.65 லட்சம் கிராமிய தபால் நிலையம் செயல்படுகிறது. ஆனால் பகுதி நேர ஊழியர்கள் எனக்கூறி அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்காமல் உள்ளனர். பணி ஓய்வுக்கு பின் அகவிலைப்படி, பென்ஷன் கிடையாது. தபால் துறையில் ஆணிவேராக உள்ள கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும். சாப்ட்வேர் மாற்றம் 6வது கட்டமாக தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர். புதிய சாப்ட்வேரை ஆக., 4 முதல் மாற்றியுள்ளனர்.ஆனால் கிராமிய அஞ்சல் நிலைய ஊழியரின் அலைபேசியில் சர்வர் வேலை செய்வதில்லை. இதனால் ஊழியர்கள் காலை முதல் அதிகாலை 12:00 மணி வரை பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கான பயிற்சியும் வழங்கப்படாததால் தபால் துறை ஸ்தம்பித்து நிற்கிறது. 'நெட்வெர்க்' பிரச்னையால் மக்கள் தபால் நிலையங்களில் வங்கி கணக்கில் பணம் போடவோ, எடுக்கவோ முடியாது. இன்ஸ்சூரன்ஸ் கட்ட முடியாது. தபால் பட்டுவாடா பாதிக்கிறது. மத்திய அமைச்சரை சந்தித்தோம். இன்னும் 10 நாட்களுக்குள் சரியாகும் என உறுதி அளித்தார். எட்டாவது சம்பளக்குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை சேர்க்கவேண்டும். இல்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை