மாநில சிலம்ப போட்டி
காரைக்குடி : சிவகங்கையில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.சிலம்ப போட்டியில் காரைக்குடி வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி, மாணவர்கள் ஜீவா மற்றும் முகமது நதிர் வெவ்வேறு பிரிவுகளில் முதல் இடத்தை பிடித்தனர்.இதன் மூலம் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஹேமமாலினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.