மேலும் செய்திகள்
செய்யூர் அரசு கல்லுாரிக்கு நிலம் ஒதுக்கீடு
27-Apr-2025
மானாமதுரை: மானாமதுரை அரசு கலைக் கல்லுாரி தற்காலிகமாக செய்களத்துாரில் தனியார் பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்பட நேற்று பணிகள் துவங்கியது.கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த கல்வியாண்டு முதலே கல்லுாரி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கல்லுாரிக்கு புதிய கட்டடங்கள் கட்ட மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டே தற்காலிகமாக கல்லுாரி இயங்க செய்களத்துார் பகுதியில் செயல்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மூடிக் கிடந்த தனியார் பாலிடெக்னிக் வளாகத்தில் கல்லுாரி செயல்பட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த கட்டடத்தில் உள்ள 6 வகுப்பறைகளில் தற்காலிகமாக அரசு மற்றும் கலைக் கல்லூரி செயல்பட மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.எம்.எல்.ஏ., தமிழரசி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., ரமேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கல்லுாரி செயல்படுவதற்கான வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை பார்வையிட்டனர். மானாமதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிற நிலையில் வருகிற கல்வி ஆண்டு முதல் இங்கு கல்லூரி செயல்படும் எனவும் கல்லூரிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டி முடித்த பிறகு சொந்த கட்டடத்திற்கு கல்லூரி மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27-Apr-2025