அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சேவை மையம்
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் 2025 - -26ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையத்தை பொறுப்பு முதல்வர் அழகுச்சாமி தொடங்கி வைத்தார். கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிக நிர்வாகவியல், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர மே 27ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.பி.எஸ்.சி., தாவரவியல் முதல் சுழற்சியில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகின்றது. மற்ற பாடப் பிரிவுகள் அனைத்தும் இரு சுழற்சியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.50 என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் என அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் மே 27ஆம் தேதிக்குள் சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து மாணவர்கள் பயன்பெறலாம்.