மாநில சிலம்பம் போட்டி வெள்ளி பதக்கம் பெற்ற மாணவி
மானாமதுரை, : முதல்வர் கோப்பை மாநில சிலம்ப போட்டியில் அரசு மேல்நிலை பள்ளி மாணவி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். சிவகங்கை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஜெயஸ்ரீ. இவர் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை மாநில சிலம்ப போட்டியில் பங்கேற்றார். சிலம்பம் மகளிர் பிரிவில் 60 முதல் 70 கிலோ எடை பிரிவில் தொடுமுறை போட்டியில் வெள்ளி பதக்கம், ரூ.பரிசு தொகை ரூ.75 ஆயிரம் பெற்றார். இவர் 2024 ம் ஆண்டு நடந்த போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றிருந்தார். தொடர்ந்து மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இரண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.