உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்கள் அச்சம் ...: புதர்மண்டிய விடுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

அரசு பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்கள் அச்சம் ...: புதர்மண்டிய விடுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

சிவகங்கை: மாவட்டத்தில் 83 அரசு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகள் புதர்மண்டி கிடப்பதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தில் மாணவர்கள் அச்சத்துடன் தங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்ட அளவில் பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் 32 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளும், 10 கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் 1500க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படிக்கின்றனர். பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கப் படுகின்றனர். அதே போன்று ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 36 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளும், 5 கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளும் என 41 விடுதிகள் உள்ளன. இங்கு 2200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி விடுதி களில் தரமற்ற, சரியாக வேகாத சாப்பாடு, காய்கறிகளுடன் சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக புகார் உள்ளது. விஷச்ஜந்துக்களால்பதற்றம் மாவட்ட அளவில் உள்ள 83 விடுதிகள் பெரும்பாலும் புதர்மண்டியே காணப்படுகிறது. விடுதி வளாகத்தை சுற்றிலும் மின்விளக்கு வசதியின்றி, இரவில் விஷச்ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் விடுதி மாணவ, மாணவிகள் விடுதியை விட்டு வெளியே வரவே அச்சமுற்று ஒரு வித பதற்றத்துடனே நட மாடுகின்றனர். எனவே மாவட்ட நிர் வாகம் மாணவ, மாணவிகள் விடுதிகளில் போதிய மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு, புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளைபாதுகாக்க உத்தரவு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆனந்தி கூறியதாவது: காஞ்சிரங்கால் விடுதியில் ஒரு மாணவி பாம்பை பார்த்து பயந்து விட்டார். அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் பல முறை சோதனை செய்ததில், பாம்பு கடிக்கவில்லை என உறுதி செய்தோம். இதையடுத்து அனைத்து விடுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வார்டன் களுக்கு உத்தரவிட்டுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை