உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிக்காத வகுப்பறை கட்டடம் அமர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

பராமரிக்காத வகுப்பறை கட்டடம் அமர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் தி.வைரவன்பட்டி துவக்கப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் பராமரிப்பிற்கான திட்டம் நிர்வாக அனுமதிக்காக பல மாதங்களாக காத்திருக்கிறது. தி.வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். இந்தபள்ளியில் வகுப்பறைக் கட்டடம் தரைத்தளம் சேதமானதை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணி நடந்தது. ஆனால் சரியாக செய்யாததால் மீண்டும் குண்டும் குழியுமாகி விட்டது. இதனால் மாணவர்கள் துாசியுடன் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கட்டடத்தை பராமரிக்க பள்ளி மேலாண்மைக்குழு கோரியதை அடுத்து மாவட்ட நிர்வாகம் ஒன்றிய பொது நிதியில் பராமரிக்க அறிவுறுத்தியது. அதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினர் ரூ 4.45 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்தனர். தற்போது பல மாதங்களாகியும் நிர்வாக அனுமதி கிடைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் துாசி படர்ந்த வகுப்பறையில் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை