மாணவர்கள் பொறுப்பேற்பு
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் தலைவருக்கான தேர்தல் நடந்தது. மாணவர் தலைவராக பாரதி ரெய்னா, துணைத் தலைவராக விஷ்ணு வெற்றி பெற்றனர். பதவி ஏற்பு விழாவிற்கு தாளாளர் சத்தியன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சங்கீதா முன்னிலை வகித்தார். என்.சி.சி., 9 வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் சுஷாந்த் குமார் மிஸ்ரா கலந்து கொண்டார். பள்ளி கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றார். துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.