காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் மாணவர்கள்
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போதிய டவுன் பஸ் இல்லாததால் நீண்ட நேரம் காத்துக் கிடக் கின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலை, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா இன்ஜி., கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக், அரசு சட்டக் கல்லூரிக்கு தினமும் மாணவ, மாணவிகள் சென்று வரு கின்றனர். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல போதிய டவுன் பஸ்கள் இல்லை. இதனால் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது. வேறு வழியின்றி கூட்டமான பஸ்களில் மாணவர்கள் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. தவிர, படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.